மட்டக்களப்பு,வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்க உறுப்பினர்களால் இன்று பிற்பகல் கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை சிலர் சீர்குலைக்க முற்படுவதாக தெரிவித்து பல்கலைக்கழகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் ஊழியர் சங்கத்தினை சேர்ந்த அனைத்து ஊழியர்களும் பங்குகொண்டனர்.

அண்மைக்காலமாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை சிலர் தனிப்பட்ட சுயலாபங்களுக்காக தவறான முறையில் பிரசாரம் செய்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

“தனிப்பட்ட ஒரு சிலரின் சுயலாபத்திற்காக பல்கலைக்கழகத்தின் எதிர்காலத்தினை பாழடிக்காதே”,வீண்விவாதம் தவிர், பல்கலைக்கழக அபிவிருத்தியில் இணை, உலகதரம் நோக்கிய கல்வி பயணத்திற்கு தடையாக இருக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்

Comments

comments